CREDBAL எவ்வாறு செயல்படுகிறது

  • 10-Feb-2022
  • CREDBAL TAMIL

  • விற்பனையாளர் (1) மற்றும் வாடிக்கையாளர் (2)  ஆகிய இரண்டு நபர்களும்  CREDBAL இணையதளத்தில்  தங்களை  பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, விற்பனையாளர் (1) தனக்கு வரவேண்டிய தொகை, அந்த தொகைக்கு உண்டான கெடுநாள் தேதி மற்றும் யாரிடம் இருந்து அந்த தொகை வரவேண்டும் என்ற தகவல்களை இணையதளத்தில் பதிவிடவேண்டும்.
  • CREDBAL, அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட வாடிக்கையாளர் (2) கணக்கிற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பும்.
  • அந்த தகவல்கள வாடிக்கையாளர் (2) இணையதளக் கணக்கு மூலம் ஒப்புக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.
  • அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டால் அது தங்கள்  CREDBAL இணையதளத்தில் பட்டியலிடப்படும்.
  •  வாடிக்கையாளர் (2) குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்தினால்,
    1.  விற்பனையாளர் (1) CREDBAL இணையதளத்தில் அவ்வாறு பெறப்பட்ட பணத்தை பற்றி பதிவிடலாம்.     (அல்லது)
    2. வாடிக்கையாளர் (2) CREDBAL இல் தாங்கள் செலுத்திய தொகையை விற்பனையாளர் (1) ஒப்புதலுடன் பதிவிடலாம்.
  • பணம் முழுமையாக கிடைத்தவுடன் பரிவர்த்தனை முடிந்ததாக கருதப்படும்.
  • குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவர்களது “CREDBAL SCORE” குறையும்,
  • அவ்வாறு “CREDBALSCORE” குறையத் தொடங்கினால், மக்கள் குறிப்பிட்ட நபருக்கு அல்லது வணிக நிறுவனங்களுக்கு மேலும் கடன் வழங்குவதை நிறுத்துவார்கள், இது அவர்களின் எதிர்கால வணிகத் தேவைகளைப் பாதிக்கும்.
  • எனவே, உங்கள் அனைத்து பரிவர்தனைகளையும் CREDBAL மூலம் மேற்கொண்டால், நீங்கள் விற்பனை செய்த கடன் தொகையை சுலபமாக வசூலிக்கவும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்காவும் CREDBAL பேருதவியாக இருக்கும்.
  • மேலும் Credbal மக்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் நிதி ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது

Share the post